ஒரு அழகான மஞ்சள் நிற சட்டை, கடையின் வாசலில் உள்ள பொம்மை ஒன்றில் தொங்கிய படி இவ்வாறு பொலம்பி கொண்டிருந்தது.
“என்னை பெங்களூர்ல உற்பத்தி பண்ணி, டிரக் மூலமா சென்னைக்கு கொண்டு வந்தாங்க, உடனே ஒரு பொம்மைக்கு போட்டு அழகு பாக்குறாங்க, ஆனா கொடுமைய பாருங்க, வந்து கொஞ்ச நாள் கூட ஆகல, இந்த 2k புள்ளைங்க எல்லாம் என்ன பழைய ஃபேஷன்னு சொல்றாங்க,
சரி..! நமக்குனு ஒருத்தன் வராமலா போயிருவான்?” என்று மஞ்சள் சட்டை பொலம்பியது படி
90க்ஷ் கிட்ஸ் ஒருவன் அந்த கடைக்கு வந்தான், அவன் ஆசையாக மஞ்சள் சட்டையை பார்க்க, அப்போது மஞ்சள் சட்டை,
“டேய்..! யாருடா நீ? என்னை தொட்டு தொட்டு பாத்துக்கிட்டு இருக்க? என
ஆச்சிரியமாய் பார்க்க, அந்த 90க்ஷ் கிட்ஸ் சட்டைய எடுத்துக்கிட்டு டிரெயில் ரூமுக்கு போக, “என்னடா..! எடுத்துகிட்டு டிரெயில் ரூம்கே வந்துட்டே! நல்ல வேளை உனக்கு நா லூஸ்ஸா இருக்கேன், வாங்க மாட்ட!” என்று மஞ்சள் சட்டை எண்ண, ஆனால் சட்டையின் எண்ணத்திற்கு எதிர்மாறய் 90க்ஷ் கிட்ஸ்ன் அம்மா சட்டை நல்லாருக்குனு சொல்ல,
“என்னாது! சட்டை நல்லா இருக்கா?, ஏம்மா நல்லா பாருமா..,லொட லொடனு இருக்கு. இப்பிடி தாங்க.., அம்மா கூட வந்தா வளர்ற பையன்னு, லொட லொடனு, வாங்கி குடுத்துருவாங்க, ஆக்சுவலா நா நல்லாதான் இருக்கேன், இவன் தான் ஒல்லியா இருக்கான், ஆனா பாக்குறவங்க, என்னைல லூஸ்ஸுனு சொல்லுவாங்க, டேய்..! வேணாம் டா!, வாங்காதடா!.” என்று என்னதான் மஞ்சள் சட்டை கத்தினாலும்,
மனிதனுக்கு கேட்க்குமா என்ன? ஆதலால் “சரி விடு.., பில்லும் போட்டாச்சு, உள்ளையும் வச்சாச்சு, இனி ஒண்ணும் பண்ண முடியாது” என்றது சலிப்புடன்.
அடுத்த நாள் 90க்ஷ் கிட்ஸ்ன் வீட்டில்,
“என்னடா..! குங்குமம் எல்லாம் வைக்கிற.., ஓஹோ!.. உனக்கு பொண்ணு பாக்க போறங்களா, அதுக்கு தான் என்ன வாங்குனியா, நல்லது,” என்று சட்டை எண்ணுவதற்குள், “இப்ப என்னடா..! கண்டத மேல பூசுர, அது டியோடரன்ட்டா, என் மேல எதுக்கு அடிக்கிற?, நல்லா அடிக்கிறான்டா கொசு மருந்து மாதிரி” என்று கதறவைத்து விட்டான் அந்த 90க்ஷ் கிட்ஸ்.
சில நாட்களுக்கு பிறகு மஞ்சள் சட்டை கேட்பார்யற்று கிடக்க,
“என்னடா..! இப்டி போட்டு வச்சுருக்க!?, மொதல பேக்ல வச்சுருந்தான், அப்பறம் ஹேங்கர்ல மாட்டுனான், அப்பறம் பெட்ல போட்டு வச்சுருந்தான், இப்போ நானும் செருப்பும் ஒண்ணா கிடக்குறோம், அவனோ.., குடிச்சிட்டு கீழ கிடக்குறான்.” இவ்வாறு
சட்டை பொலம்பியது 90க்ஷ் கிட்ஸ்க்கு கேட்டுவிட்டது போல, அவன் துணியை ஊற வைக்கிறான்.
“அப்பாடி..! இப்போவாது துவைக்க எடுத்தானே.,” என்று சட்டை நிம்மதி அடைவதற்குள் ஜீன்சையும் சேர்த்து ஊற வைக்க, “என்னடா..? ஜீன்சையும் என்னோட போட்டு அமுக்குற, டேய்.., இவன் சாயம் போவான்டா,” என்று முனு முனுத்தவாறு ஜீன்ஸ் பக்கம் திரும்பி,
“டேய் ஜீன்ஸ்..!, ப்ளூ கலர்ல இருந்த நீ.., எப்டி இப்டி கரி கட்டையா மாறி
போன?,” என்று கேட்க,
அதற்கு ஜீன்ஸ் “நீயாவது பரவா இல்ல.., என்ன 3 மாசத்துக்கு முன்னாடி துவச்சான்..,இப்பதா என்ன மறுபடியும் துவைக்க போறான், நானும் சுத்தம் ஆக போறேன்..,” என ஜீன்ஸ் சந்தோசப்பட,
பதிலுக்கு சட்டை, “சுத்தம் ஆக போறியா?, டேய்.., நீ கக்குறத பாத்தா, மஞ்சளா இருக்கிற நா, ப்ளூவா மாறிட போறேன்டா.., நவந்து போடா,” என்றது.
3 நாட்கள் கடந்தும், துணியை துவைக்காத நிலையில், “யம்மா..! குளூர் ஜூரமே வந்துருச்சுடா., மூணு நாளுக்கு முன்னாடி நைட் ஊற வச்சான்டா, அப்பறம் மறந்துட்டான்.., என்னோட கஃப்பு எனக்கே தாங்கலடா, சீக்கிரம் இந்த தண்ணில இருந்து எடுடா.” என முனுமுனுக்க,
அதற்கு ஜீன்ஸ், “எனக்கு குளுரவே இல்ல...,” என்று நக்கல் அடிக்க
பதிலுக்கு சட்டை, “டேய்.., கம்முனு இரு, என்ன ஊற வச்சது கூட பரவா இல்லடா, ஆனா உன்னோட சேத்து ஊற வச்சான் பாரு.., என் வாயில நல்லா வருது, என்ன பாருடா.., பளபளனு இருந்த என்னை.., இப்டி நசநசனு போட்டு வச்சுருக்கான்.” என வருந்தியது.
ஒரு வழியாக அனைத்து துணிகளும் துவைக்கப்பட்டது, இதுவே தொடர் கதை ஆனதால் சட்டை பழசாக மாறியது,
சில மாதங்களுக்கு பிறகு, 90க்ஷ் கிட்ஸ் மஞ்சள் சட்டையை ஆசையாய் அணிய, அப்போது மஞ்சள் சட்டையின் பொலம்பல்,
“டேய்.., சொன்னா கேளு.., இப்ப நீ கொஞ்சம் ஊதி போய்யிட்ட, நா உனக்கு பத்த மாட்டேன், ஒரு காலத்துல நீ ஒல்லியா இருந்தா அப்பறம் ஃபிட் ஆன, ஆனா இப்போ ஓவர் ஆயிறுச்சுடா, “ என்று சட்டை கதறி முடிவதற்குள்,
90க்ஷ் கிட்ஸ் அக்குல கிழிச்சுட்டான், தொப்பைய வச்சு பட்டனையும் பிச்சுட்டான்.
“டேய், நா பாட்டுக்கு சிவனேனு தானடா இருந்தேன், இப்ப இப்டி அக்குல கிழிச்சு, புக்கு வைக்கிற அலமாரிக்கு கொண்டு வந்து போட்டியடா.” என திட்டியவாறு யாருக்கும் பயனற்று, சட்டை புத்தக அலமாரியில் கிடந்தது.
ஒரு வருடத்திற்கு பிறகு, 90க்ஷ் கிட்ஸ் திரும்ப அந்த சட்டையை எடுக்க,
“யாருடா நீ? ஓ! அவன் தானா?, முன்னாடியாவது வயித்துல தான் தொப்பைய பார்த்தேன், இப்போ என்னடா மூஞ்சி ஃபுல்லா தொப்பைய வச்சுருக்க,” என்று நக்கலடிக்க, சட்டையை பார்த்துக் கொண்டிருந்தவன் அதை மேலும் கிழிக்க,
“டேய்.., என்னடா கிழிக்கிற!?, ஆமா, என்னை ரெண்டா கிழிச்சு, ஒரு பாதிய வச்சுட்டு, இன்னொரு பாதிய எங்கடா தூக்கிட்டு போற? கரி துணியாக்க போரியா?., ஆனா நீ, வீட்ட சுத்தம் பன்ற ஆளு இல்லையே?” என்று அத்தனை விக்ஷயங்களையும் சட்டை யோசிக்க, அப்போ அங்க ஒரு அதிர்ச்சி காத்திருந்தது,
“டேய்..! என்ன கருமம்டா, அது,? ஒரு காலத்துல, உன்ன அழகா காமிச்சு, உனக்கு கல்யாணம் ஆக காரணமா இருந்தவன்டா, அதுனாலதா உனக்கு குழந்தையே பொறந்தது, நீ வேற எதவேனாலும் தொடச்சுக்க, ஆனா இத மட்டும் தொடச்சுறாதடா.” என்று ரத்த கொதிப்பு வந்தது போல கத்த, காது கேட்காத 90க்ஷ் கிட்ஸ்யோ தனக்கு பிறந்த 2k கிட்ஸ்ன் கழிவை தொடைக்க, மஞ்சள் சட்டையின் பொலம்பல் முழுவதுமாக அடங்கியது.
ஆசிரியர்,
கோவர்த்தன் & நிர்மலா.
No comments:
Post a Comment